ஓ.பன்னீர்செல்வம் வேண்டாம்! நேற்றிரவு நடந்தது இதுதான்- பரபர பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா நேற்று இரவு காலமானதை தொடர்ந்து அவரின் பூத உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படவுள்ளது.

நேற்று நள்ளிரவு 1.30 மணி அளவில் தமிழ்நாட்டின் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்று கொண்டார்.

அவர் முதல்வராக பதிவி ஏற்று கொள்வதற்கு சசிகலா முதலில் தடையாக இருந்தார் என்ற விடயம் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது அப்பலோ மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவின் இறப்பு உறுதி என தெரிந்தவுடன் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் புதிய முதல்வராக யாரை நியமிப்பது என்ற விடயத்தை பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவிடம் போனில் கேட்டுள்ளார்.

அவர்களுடன் சேர்ந்து முக்கிய மத்திய அரசு பிரதிநிதிகளும் இரண்டு முறை முதல்வராக இருந்து தகுதி பெற்ற ஓ.பன்னீர்செல்வத்தையே மீண்டும் முதல்வராக நியமிப்பதே சரி என கூறினார்கள்.

இதை ஏற்காத சசிகலா மாலையில் வெங்கய்யா நாயுடு சென்னை வந்தவுடன் அவரிடம் , அமைச்சரைவையில் பலர் இருக்கிறார்கள் அவர்கள் யாரையாவது நியமிக்கலாம் என பிடிவாதம் பிடித்ததாக தெரிகிறது.

இப்படியொரு இக்கட்டான சூழலில் இதுகுறித்து விவாதங்களை வளர்க்க வேண்டாம் என சசிகலாவிடம் கூறிய வெங்கய்யா நாயுடு.

ஜெயலலிதாவின் விருப்பமாக இருந்த ஓ.பி.எஸ் இப்போதைக்கு இருக்கட்டும் ,பிறகு மற்றதை பார்த்து கொள்ளலாம் என கூற அந்த விடயம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments