ஜெயலலிதா மறைவை அடுத்து சொத்து குவிப்பு வழக்கு தொடர்பில் புதிய சர்ச்சை

Report Print Amirah in இந்தியா

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார்.

இந்த நிலையில் அவர் மீது சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கு நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, நடராஜன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக ஹைகோர்ட் விடுதலை செய்ததை எதிர்த்து கர்நாடக அரசு, தி.மு.க செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு திகதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதா இறந்துள்ள நிலையில், இருவகையில் வழக்கு பயணிக்க கூடும் என அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

ஒருவேளை இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டால் அத்தோடு அந்த பிரச்சினை தீரும்.

ஆனால் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தால் தான் பிரச்சினை உருவாகும்.

இவ்வாறான நிலை ஏற்பட்டால் ஜெயலலிதாவுக்கு தண்டனை கொடுக்க முடியாது என்ற போதிலும், சொத்துக்குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்ட அவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும்.

மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் சம்மந்தப்பட்ட பிற குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments