மொட்டை அடித்து முதல்வருக்கு அஞ்சலி

Report Print Amirah in இந்தியா

கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார்.

இதையடுத்து அவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டது. அதன் பிறகு அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

முதல்வருக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் திண்டுக்கல் அருகே உள்ள நத்தம் நெச்சி ஓடைபட்டியில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அத்தோடு 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமிழக முதல்வர் படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் ஜெயலலிதா திரு உருவ படத்தில் மாலை அணிவித்து மெளன ஊர்வலமாக எடுத்து சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments