அன்று அப்பல்லோ மருத்துவமனையில் தடுத்து நிறுத்தப்பட்ட ஜெயலலிதா! ஏன்?

Report Print Raju Raju in இந்தியா

தமிழகம் மட்டுமில்லாமல் மொத்த இந்தியாவையும் துயரில் ஆழ்த்தி விட்டது முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு.

கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதியிலிருந்து 75 நாட்கள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவரை பற்றிய மற்றொரு தகவல் இதோ,

1982ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த ஜெயலலிதாவுக்கு அடுத்த ஆண்டே எம்.ஜி.ஆர் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை வழங்கினார்.

இது கட்சியில் இருந்த நெடுஞ்செழியன், ஆர்.எம். வீரப்பன், ஹண்டே, கே.ஏ. கிருஷ்ணசாமி போன்ற சீனியர்களுக்கு பிடிக்காமல் போனது. அவரை கட்சியில் இருந்து வீழ்த்த வேண்டும் என பலர் நினைத்தார்கள்.

இதனிடையில் உடல்நல குறைவு காரணமாக என்.ஜி.ஆர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது அவரை காண ஜெயலலிதா சென்றார்.

ஆனால் எம்.ஜி.ஆருக்கு உடல் நல கோளாறு ஏற்ப்பட ஜெயலலிதா தான் காரணம் என கூறிய கட்சியின் அந்த சீனியர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்குள் ஜெயலலிதாவை அனுமதிக்கவே இல்லை.

எந்த அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கபடவில்லையோ அதே மருத்துவமனையில் மரணம் அடைந்திருப்பது பெரும் சோகமான விடயமாக அமைந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments