இரும்பு பெண்மணிக்கு இலங்கையிலும் இரங்கல்

Report Print Amirah in இந்தியா
232Shares

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து இலங்கயிலும் பலர் தமது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

தமிழக மக்கள் மற்றும் ஜெயலலிதாவின் அன்புக்குரியவர்களுக்கு தனது இரங்கலை தெரிவிப்பதாக ஜனாதிபதி தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மரணம் குறித்து இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்திய தமிழ் சமூகத்தின் இதயங்களை கைப்பற்றிய தமிழக முதல்வர் ஜெயலிதாவின் உறவினர்கள் மற்றும் தமிழ் நாட்டு மக்களுக்கு தனது இரங்களை தெரிவித்துள்ளார்.

அரசியலில் தனித்து தமிழ் மக்களுக்காக உரத்துக் குரல்கொடுத்த, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை நாமல் ராஜபக்ஸ கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஜெயலலிதா ஜெயராம் அவர்களது மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைகின்றேன் என அறிக்கையில் கூறியுள்ளார்.

அத்தோடு இன்று இலங்கை பாராளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்றத்தில் இரங்கல் தெரிவித்தார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனும் தன்னுடைய அனுதாபத்தை பாராளுமன்றத்தில் தெரிவித்துக்கொண்டார்.

தமிழ் நாட்டுஅரசியலில் இரும்புப் பெண்மணி என்றழைக்கப்பட்ட செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் நேற்றுகாலமானது எம் எல்லோருக்கும் மிகுந்த சோகத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. என வட மாகாண முதலமைச்சர் சி.எ விக்னேஷ்வரன் வடமாகாண சபையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மறைவினால் வடமாகாண சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன், 2 நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments