சசிகலா வேண்டாம்! துயரத்தின் மத்தியிலும் மக்கள் ஆவேசம்

Report Print Amirah in இந்தியா

ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த வந்த அதிமுக பெண் தொண்டர்கள் எங்களுக்கு சசிகலா வேண்டாம் என்று ஆவேசமாக கோஷம் எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

சசிகலாவே முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் இருந்து உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட பின்னரும் அருகிலேயே இருந்து வருகின்றார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ள எம்.ஜி.ஆர் சமாதியின் அருகில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

அங்கு குவிந்துள்ள மகளிர் அணியினர் திடீரென ஆவேசமாக கோஷமிடத் தொடங்கினார்.

அப்போது எங்களுக்கு சசிகலா வேண்டாம் என்றும் கூடவே இருந்து குழி பறித்தவர் சசிகலா என்றும் ஆவேசமாக பெண்கள் கோஷம் எழுப்பியுள்ளார்கள். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சசிகலா நடராஜன் தொடக்கத்தில் இருந்தே ஜெயலலிதாவுடன் இருப்பவர், பல்வேறு சிக்கல் ஏற்பட்ட போதிலும் உடன் இருந்து வருபவர் அவர் தான்.

பல முறை ஜெயலலிதா சசிகலாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பினாலும், மீண்டும் இருவரும் சேர்ந்து கொள்வார்கள்.

முதல்வரின் உடலைக் காண ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் ராஜாஜி ஹாலில் குவிந்து வருகின்றனர்.

அவர்கள் அனைவரும், ஜெயலலிதாவின் மறைவை ஏற்றுக் கொள்ள முடியாத துயரத்தின் உச்சத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments