ஆளுநரை சந்திக்கிறார் ஓ.பி.எஸ்

Report Print Arbin Arbin in இந்தியா

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்தில் நடைப்பெற்று வருகிறது.

இன்று இரண்டவது முறையாக அதிமுக எம் எல் ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் கூடியது.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு சென்னை அப்போலோவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அதிமுக தலைமை அலுவலகம் சென்றனர்.

இதனிடையே சென்னை கிரீம்ஸ் சாலை முதல் ஜெயலலிதா இல்லம் அமைந்துள்ள போயஸ் கார்டன் வரை சாலையின் இருபுறுமும் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மட்டுமின்றி அப்போலோ மருத்துவமனையை சுற்றிலும் பொலிசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சென்னை கிரீம்ஸ் சாலை முதல் போயஸ் கார்டன் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

போயஸ் கார்டன் பகுதியில் 300க்கும் மேற்பட்ட பொலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அப்போலோ மருத்துவமனை முன் 2,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

குறித்த கூட்டம் முடிவடைந்தவுடன் ஆளுநரை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சபாநாயகர் தனபால் ஆகியோர் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments