முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம்! ஜெயலலிதா உடல் 6ம் திகதி நல்லடக்கம்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.

ஆளுநர் மாளிகையில் மிக எளிமையாக முதல்வர் பதவியேற்கும் நிகழ்வு நடந்தது, இவரது தலைமையில் 31 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

மூன்றாவது முறையாக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா உடல் 6ம் திகதி நல்லடக்கம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானதாக அப்பல்லோ நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் உடல் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அங்கு சடங்கு சம்பிரதாயங்களை முடித்த பின்னர், 6ம் திகதி மாலை இந்திய நேரப்படி 4.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

மேலும் பள்ளி- கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது, அடுத்த முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நாளை காலை ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

தொடர்ந்து இரண்டுமுறை பதவி வகித்தவர், 32 ஆண்டுகளுக்கு பின்னர் பதவியில் இருக்கும்போதே மரணமடைந்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments