தமிழக முதல்வர் ஜெயலலிதா மாரடைப்பால் இன்று காலமானார்.
காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டால் கடந்த செப்டம்பர் மாதம் 22ம் திகதி முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ச்சியாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், எய்ம்ஸ் மற்றும் லண்டன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
உடல்நலம் தேறி வந்ததாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 4ம் திகதி மாலை முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏறபட்டதாகவும், உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளித்து வந்ததாகவும் அறிக்கை வெளியானது.
அந்த நொடியில் இருந்தே தமிழகம் பரபரப்பானது, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த அந்த அறிக்கை மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
மிக முக்கியமாக ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானதாக வதந்திகளும் பரவியதால் தமிழகமே ஸ்தம்பித்து போனது.
இந்நிலையில் ஜெயலலிதா இரவு 11.30 மணிக்கு காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பேருந்துகளும் இயக்கப்படாமல், கடைகளும் மூடப்பட்டதால் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது குறிப்பிடத்தக்கது.