ஜெயலலிதா உடல்நிலை: இவரது அறிக்கையே இறுதியானது!

Report Print Jubilee Jubilee in இந்தியா

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவர் கிலானி அளிக்கும் முடிவே இறுதியானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் மிகவும் மோசமான உடல் நிலையில் இருக்கிறார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவரது உடல் நிலை குறித்து தவறான வதந்திகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால் வெளியான செய்திகள் உண்மையில்லை என்றும், முதல்வருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில் முதல்வருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவரான கிலானி தலைமையிலான மருத்துவர் குழுவினர் தான் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனால் இவர் அளிக்கும் முடிவே இறுதியானதாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் அவர் இதுவரை எந்த முடிவும் கூறவில்லை என்றும், இதனாலே வதந்திகள் வெளியாகி வருவதாகவும் அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments