ஜெயலலிதாவுக்கு அளித்து வரும் ECMO சிகிச்சை எப்படி வேலை செய்யும் தெரியுமா?

Report Print Arbin Arbin in இந்தியா

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எக்மோ என்ற கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த கருவியின் செயல்பாடு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவருக்கு இதயத்தின் செயல்பாடு நின்றுபோகும் நிலையே மருத்துவ ரீதியாக கார்டியாக் அரெஸ்ட் என்றழைக்கப்படுகிறது.

அத்தகைய சிக்கலான நிலைதான் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இ.சி.எம்.ஓ. என சுருக்கமாக அழைக்கப்படும் EXTRA CORPOREAL MEMBRANE OXIGENATION முறையில் தான் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது..

ஒருவருக்கு இதயமும், நுரையீரலும் செயல்படாத நிலை ஏற்படும் போது செயற்கையாக பிராண வாயுவை செலுத்துவதற்கான வழிமுறையே இந்த சிகிச்சையாகும்.

இதயத் துடிப்பு தடைபடும் நிலையில் இறுதி முயற்சியாக மருத்துவர்கள் மேற்கொள்ளும் நவீன சிகிச்சைகளில் இதுவும் ஒன்றாக உள்ளது.

இதயம் மற்றும் நுரையீரல் இயற்கையாகவே கரியமில வாயு எனப்படும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றி ஆக்சிஜனை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

இதன் மூலம் இவ்விரு உறுப்புகளுக்கும் பிராண வாயு செலுத்தப்பட்டு உயிரைக் காப்பாற்ற முயற்சிக்கப்படுகிறது. மேலும் இரத்த சிவப்பு அணுக்களில் செயற்கையாக கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றி ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது.

ஒருவருக்கு இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாடுகள் முற்றிலும் தடைபடும் நிலையிலேயே அதிகபட்ச சிகிச்சை முறையாக இ.சி.எம்.ஓ. பயன்படுத்தப்படுவதாக மருத்துவக் குறிப்புகளில் இருந்து தெரிய வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments