ஜெ.ஜெ மேட்டர்..! சுப்பிரமணிய சுவாமி கொளுத்தி போட்ட டுவிட்டால் பரபரப்பு

Report Print Jubilee Jubilee in இந்தியா

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த அறிவிப்பு 6 மணிக்கு வெளியாகும் என்று பாஜக மூத்த தலைவருமான சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் அதிமுக தொண்டர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உள்ளனர்.

மருத்துவர்களும் தங்களால் முடிந்தவற்றை செய்துவிட்டதாகவும், முதல்வர் உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை பிரதமர் மோடி 6 மணிக்கு வெளியிடுவார் என்று ராஜ்யசபா எம்.பியும், பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா காலமாகிவிட்டதாக செய்தி வெளியாகியது.

ஆனால் சில நிமிடங்களில் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், வெளியான செய்தி தவறானது என்றும் அப்பல்லோ மருத்துவமனை தகவல் வெளியிட்டது.

ஆனால் சுப்பிரமணிய சுவாமி கொளுத்தி போட்டது போல் எந்தவித செய்தியும் வெளியாகவில்லை.

சொன்னது போல் ஏதும் வெளியாவில்லை என்று பலரும் கேட்டதற்கு 6 மணிக்கு வெளியாக வேண்டியது இரவு 11 மணிக்கு தள்ளிப்போடப்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments