வைரலாய் பரவும் அம்மா கவிதை!

Report Print Fathima Fathima in இந்தியா

பூ போன்ற மகள்
அப்பல்லோவில் படுத்துக் கிடக்கிறாளே என
புலம்புவதற்கு தாய் இல்லை....

நோய் தீர்ந்து மகள்
புன்னகை சிந்தி வருவாளென
பார்த்திருக்கத் தந்தை இல்லை...

தெய்வங்களைக் கேட்டே
என் சகோதரி நலம் மீட்பேன்
என்று பூசை செய்ய
சகோதரன் இல்லை..

மாற்றுடை வேண்டுமோ என
உடுப்புகள் தேடி எடுத்துப் போக
உடன் பிறந்த தங்கை இல்லை..

பெற்றவள் நலம் மீட்ட பின்பே
மற்ற வேலை என்று
மார் தட்டிச் சொல்வதற்கு மகன் இல்லை..

மருந்து மாத்திரை தேடி
எடுத்து மணி தவறாமல்
கொடுத்திட
மகள் இல்லை..

ஆனாலும் ஈரெட்டு நாட்களாய்
தாய் முகம் காணாமல்
எத்தனை இதயங்கள் இங்கே
கண்ணீரில் குளிக்கிறதே..
கட்டுக்கடங்கா கூட்டம்...
வாழ வைத்த தாய்
வாடிக் கிடக்கலாமோ என
செந்தனலில் இட்ட புழுவாய்
தவிக்கிறது...

உள்ளங்கைக்குள் மாணவர்
உலகைக் காண மடிக்கணினி
தந்த மாதரசி நலம் பெறவே
வேண்டி நிற்கிறது மாணவச் சமூகம்..

காவேரியை மீட்டு வந்து
முல்லைப் பெரியாரை
காத்துத் தந்து கழனி வாழ்
உழவினத்தின் கண்ணீர் துடைத்த
எங்கள் கனிவு மனத் தாயுன் நிலை
பொறுக்காமல் உயிர் உருகும்
வேதனையில் உழவர் கூட்டம்
இன அழிப்பு இலஙகைக்குக்
குலைநடுக்கம் கொடுத்த
உலகத் தமிழினத்தின்
ஒப்பில்லாத் தலைவியை
ஒரு நோய் வந்து சாய்ப்பதுவா என
ஊணுறக்கம் கொள்ளலையே..
கருணை தரித்த
எங்கள் அம்மா உமக்கோ
பத்து கோடி பாசப் பிள்ளைகள்..

வாஞ்சை மிகு தாய்
எழுந்து வரும் நாளை எதிர்பார்த்து வாடுதே எங்கள் மனசு..

அம்மாவின் வருகையை எதிர்பார்த்திருக்கும் கோடி இதயங்களில் நானும் ஒருவனாய்..

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments