அதிமுக-வின் முக்கிய பொறுப்பில் சசிகலா? டெல்லி திரும்பிய வெங்கய்யா நாயுடு

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதை தொடர்ந்து அதிமுக-வின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இடைக்கால முதல்வர் யார் என்பது குறித்து எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

சசிகலா குடும்பத்தினர் அல்லது ஆதரவாளரை நியமிக்கலாம் என எண்ணியுள்ள நிலையில் முட்டுக்கட்டை போட்டுள்ளதாம் மத்திய அரசு.

இந்நிலையில் காலையில் நடந்த கூட்டத்தில் தலைமைக்கு கட்டுபட்டு ஒற்றுமையாக செயல்படுவோம் என எம்எல்ஏ-க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

எனவே தற்காலிக பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவே நியமிக்கப்படலாம் என அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தற்போது எம்எல்ஏ-க்கள் கூட்டம் முடிந்துள்ள நிலையில் முக்கிய முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு அப்பல்லோ வந்து மருத்துவர்களிடம் விசாரித்து சென்றுள்ளார்.

டெல்லி திரும்பிய அவர் மத்திய அரசு கலந்து ஆலோசிக்கலாம் என தெரிகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments