தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு! சென்னையில் உச்சகட்ட பாதுகாப்பு

Report Print Jubilee Jubilee in இந்தியா

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாக இருப்பதாக வெளியான தகவலையடுத்து பாதுகாப்பு காரணங்கள் கருதி சென்னையில் பல தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று அவரது உடல்நிலை மோசமானது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது.

இந்நிலையில் சென்னையில் உள்ள பல தனியார் நிறுவனங்கள் பாதுகாப்பு காரணங்கள் கருதி வாய்வழியாக ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

சில தனியார் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளுக்காக பெங்களூரில் இருந்து 1500 துணை ராணுவ படையினரும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments