மிகவும் மோசமான நிலைமையில் முதல்வர்: அப்பல்லோ ஊழியர்களுக்கு திடீர் உத்தரவு

Report Print Aravinth in இந்தியா

தமிழக முதல்வர் மிகவும் மோசமான நிலைமையில் இருப்பதால் அப்பல்லோ நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த 73 நாட்களாக தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று மாரடைப்பால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து சிகிச்சைகள் அளித்து வருவதாகவும் அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் முதல்வரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து வரும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே தெரிவித்துள்ளார்.

இதனால் மருத்துவமனை முன்பு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸ்கள் மற்றும் இதர ஊழியர்கள் அவசரம் அவசரமாக வீட்டுக்குப் புறப்பட்டு செல்லுமாறு அதிரடியாக அப்பல்லோ நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நடவடிக்கையை மேற்கொள்ளும் பணியில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையில் சென்னையில் உள்ள சில தனியார் பள்ளிகள், பெற்றோருக்கு குறுஞ்செய்தி (sms) அனுப்பி உள்ளது.

அதில், இன்று பள்ளிகள் மாலை 2 மணியுடன் முடிவடைகிறது. எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments