தமிழகம் தாங்கிக் கொள்ள முடியாத துயரமா? வருட இறுதியில் அப்பல்லோவில் திக்திக் நிமிடங்கள்

Report Print S.P. Thas S.P. Thas in இந்தியா

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கு நேற்றைய தினம் மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு அதிதீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக இன்றைய தினம் மீண்டும் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இச்செய்தி தமிழகம் எங்கும் பரவிய நிலையில் தமிழக மக்கள் மத்தியில் பெரும் சோகம் ஏற்பட்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது.

முதல்வர் எப்படியேனும் மீண்டுவரவேண்டும் என அதிமுக தொண்டர்கள் கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

2016ம் ஆண்டு முடியும் தருவாயில் இருக்கும் வேளையில் தமிழக மக்களுக்Fக இச்சோக செய்தியை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கொடுத்திருக்கிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் மீண்டு வந்து ஆட்சி செய்ய வேண்டும் என்று தொடர் வழிபாடுகளில் ஈடுபடுகின்றார்கள் அக்கட்சியினர்.

முதலமைச்சரின் உடல் நிலை குறித்தான சிறப்புப் பார்வை இங்கே,

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments