மரணப்படுக்கையில் ஜெயலலிதா! அப்பல்லோ நிர்வாகி வெளியிட்ட செய்தியால் பரபரப்பு

Report Print Jubilee Jubilee in இந்தியா

தமிழக முதலவர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனையின் செயல் இயக்குநர் சங்கீதா ரெட்டி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அவருக்கு நேற்று முதல் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையின் செயல் இயக்குநர் சங்கீதா ரெட்டி பதிவிட்டுள்ள டுவிட்டில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவரது உயிரைக் காப்பாற்ற மிகவும் போராடி வருகிறோம் என்று பதிவிட்டார்.

இவரது பதிவு அதிமுக தொண்டர்களை மிகவும் கவலைக்குள்ளாக்கிய நிலையில், அந்த பதிவை உடனடியாக அவர் நீக்கிவிட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments