துப்பாக்கி ஏந்திய 1,650 துணை ராணுவப்படை வீரர்கள் சென்னை வருகை

Report Print Peterson Peterson in இந்தியா

தமிழகத்தில் அசம்பாவிதம் நிகழாமல் இருக்க பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய 1,650 துணை ராணுவப்படை வீரர்கள் சென்னைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா கவலைக்கிடமாக உள்ளதால் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் இருக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒருக்கட்டமாக, பெங்களூருவில் இருந்து துப்பாக்கி ஏந்திய 1,650 துணை ராணுவப்படை வீரர்கள் சென்னைக்கு பயணமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை அப்பல்லோவை சுற்றி ஏற்கனவே 2,000 பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வரும் நிலையில் தலைநகரில் அசம்பாவிதத்தை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இன்று காலை 11 மணியளவில் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 6 மணியளவில் இரண்டாவதாக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments