முதல்வர் ஜெயலலிதா மிகவும் கவலைக்கிடம்- அப்பல்லோ அறிக்கை

Report Print Peterson Peterson in இந்தியா

அப்பல்லோ மருத்துவமனை சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக அப்பல்லோ அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்னர் அப்பல்லோ வெளியிட்ட இரண்டாது அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து அபாயக்கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை வெளியிட்ட அறிக்கைக்கு பிறகு தற்போது இரண்டாவது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த அறிக்கையில் ‘very critical(மிகவும் அபாயக்கட்டத்தில்) இருக்கிறார் என அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ECMO மற்றும் இதர கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் குழு கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments