நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த நடிகை ஜெயஸ்ரீ! 50 பவுன் நகை மாயம்?

Report Print Aravinth in இந்தியா

சென்னையில் வீட்டின் படுக்கையறையில் இறந்து கிடந்த நடிகை ஜெயஸ்ரீயின் வீட்டில் 50 பவுன் நகை மாயமாகியுள்ளதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

சென்னை சாலி கிராமத்தில் உள்ள தனது வீட்டின் படுக்கையறையில் நேற்று தொலைக்காட்சி தொடர் மற்றும் சில விளம்பரங்களில் நடித்துள்ள நடிகை ஜெயஸ்ரீ(49) நிர்வாண நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்ட பொலிசார், ஜெயஸ்ரீ-யை தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சேலம் மாநகராட்சியில் பணிபுரியும் ஜெயஸ்ரீயின் சகோதரர் செல்வராஜ் என்பவர் ஒரு சந்தேகத்திற்குரிய தகவலை முன்வைத்துள்ளார்.

அதாவது ஜெயஸ்ரீ கொலை செய்யப்படும் பொழுது கவரிங் நகைகளை அணிந்திருந்ததாகவும், வீட்டில் வைத்திருந்துந்த 50 பவுன் தங்க நகைகளை காணவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதனால் நகையை திருடுவதற்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் பொலிஸ் தரப்பில் எழுந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments