ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு: அதிர்ச்சியில் உயிரை விட்ட அதிமுக பேரவைச் செயலாளர்

Report Print Peterson Peterson in இந்தியா

பண்ருட்டி அருகே அதிமுக பேரவைச் செயலாளர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை 4 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து முதல்வர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த சன்னியாசிப்பேட்டை சேர்ந்தவர் நீலகண்டன்(40).

இவர் நேற்று மாலை முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்த செய்தியை தொலைகாட்சியில் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து 108 அவரச வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயை நீலகண்டன் உயிரிழந்துள்ளார்.

உயரிழந்த நீலகண்டன் ஜெயலலிதா பேரவைச் செயலாளராக இருந்து வந்துள்ளார். அவருக்கு மனைவி ஷாகிலா(38), 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள கட்சியினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments