முதல்வர் உடல்நலம் குறித்து ஆளுநர் அறிக்கை வெளியிட மறுத்தது ஏன்?

Report Print Peterson Peterson in இந்தியா

சென்னை அப்பல்லோவில் தீவிர சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து ஆளுநர் அறிக்கை வெளியிடாமல் உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 75 நாட்களாக தமிழக முதல்வர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளதாக அப்பல்லோ அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டது.

அப்பல்லோவின் அறிக்கையில் அதிர்ச்சி அடைந்த ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் மருத்துவமனை முன் குவிந்தனர்.

ஜெயலிதாவின் உடல்நலம் தொடர்பாக தகவல் பெற்ற தமிழக பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர் ராவ் நேற்று மாலையில் அவசரமாக மும்பையில் இருந்து சென்னை திரும்பினார்.

சென்னைக்கு திரும்பிய ஆளுநர் நேராக ஆளுநர் மாளிகைக்கு சென்றுவிட்ட சில நிமிடங்களில் அங்கிருந்து புறப்பட்டு அப்பல்லோ சென்றடைந்தார்.

நள்ளிரவு சரியாக 12.02 மணியளவில் அப்பல்லோவிற்கு வந்த ஆளுநர் 15 நிமிடங்களுக்கு பிறகு அங்கிருந்து புறப்பட்டு ஆளுநர் மாளிக்கைக்கு சென்றடைந்தார்.

இதற்கு முன்னர் ஆளுநர் இரண்டு முறை அப்பல்லோ சென்றபோது முதல்வர் ஜெயலிதா உடல்நலம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிக்கைகள் உடனடியாக வெளியாகின

எனினும், நேற்று அப்பல்லோவிற்கு சென்ற ஆளுநர் முதல்வரின் உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.

எனினும், சற்று முன்னர் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தொடர்புக்கொண்ட ஆளுநர் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை எதுவும் இல்லை என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு ஆளுநர் அறிக்கை வெளியிடலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments