ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது? செப்டம்பர் 22 முதல் இன்று வரை

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியான நிமிடத்தில் இருந்து தமிழகமே பரபரப்புக்கு ஆளானது.

முதல்வர் பூரண நலம் பெற்று வீடு திரும்ப பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், 24 மணிநேரம் கழித்து எதுவும் தெரியவரும் எனவும் தகவல்கள் பரவி வருகிறது.

செப்டம்பர் 22: காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

செப்டம்பர் 23: ஜெயலலிதா உடல் நிலை சீராக இருப்பதாக அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிக்கை.

செப்டம்பர் 24: சாதாரண உணவுகளை ஜெயலலிதா உட்கொள்வதாக தகவல்.

செப்டம்பர் 25: ஜெயலலிதா மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வார் என்பது போன்ற தவறான செய்திகளை யாரும் வெளியிட வேண்டாம் என அப்பல்லோ நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

செப்டம்பர் 29: ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளது, அவர் சிகிச்சைகளுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தகவல்.

அக்டோபர் 2: லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆலோசனை.

அக்டோபர் 3: ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்று நோயை சரிசெய்ய, ஆன்டிபயாடிக் மருந்துகள் செலுத்தப்பட்டதுடன், சுவாசக் கருவியும் பொருத்தப்பட்டது.

அக்டோபர் 4: ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சை தொடர்வதாகவும் தகவல்.

அக்டோபர் 6: டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சென்னை வந்து லண்டன் டாக்டர், அப்பல்லோ டாக்டர்களுடன் இணைந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து ஆலோசனை.

அக்டோபர் 8: நுரையீரலில் இருக்கும் நீரை நீக்க சிகிச்சை.

அக்டோபர் 10: சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் வந்து உடற்பயிற்சி அளிக்க தொடங்கினர். அதே நாளில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் மீண்டும் அப்பல்லோ வந்தனர்.

அக்டோபர் 21: தீவிர சிகிச்சைப் பிரிவு டாக்டர்களின் தலைமையில் இதயநோய், நுரையீரல் நோய், தொற்று நோய் சிகிச்சை உள்ளிட்ட மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாக அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை.

நவம்பர் 19: தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டில் உள்ள தனி அறைக்கு ஜெயலலிதா மாற்றம். தொடர்ந்து அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டது.

டிசம்பர் 3: டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் மீண்டும் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆராய்ந்தனர்.

டிசம்பர் 4: ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments