செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம்: இதுவரை வங்கிகளில் குவிந்த பணம் எவ்வளவு?

Report Print Arbin Arbin in இந்தியா
365Shares

500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட 9 நாட்களில் 5 லட்சத்து 11 ஆயிரத்து 565 கோடி ரூபாய் பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்‌ நவம்பர் 10ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை 5 லட்சத்து 44 ஆயிரத்து 571 கோடி ரூபாய் அளவில் வங்கிகளில்‌ பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 33 ஆயிரத்து 6 கோடி ரூபாய்க்கு பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், 5 லட்சத்து 11 ஆயிரத்து 565 கோடி ரூபாய் பணம் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி கவுண்டர்களிலும், ஏடிஎம் இயந்திரங்கள் மூலமும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 316 கோடி ரூபாய் பணத்தை மக்கள் எடுத்திருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments