செயல்படாத ஆட்சி: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

Report Print Peterson Peterson in இந்தியா
121Shares

சமூக வலைத்தளங்களில் கற்பழிப்பு காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் வெளியாவதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கடுமையான விமர்சனம் செய்துள்ளது.

சமூக வலைத்தளமான வாட்ஸ் அப்பில் கற்பழிப்பு காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

மேலும், வாட்ஸ் அப்பில் வெளியாகும் கற்பழிப்பு வீடியோக்களை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணை வந்தபோது நீதிபதிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

அப்போது, ‘கடந்த 11 மாதங்களாக நீங்கள் என்ன செய்தீர்கள்? வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால், நீங்கள் இவ்வழக்கு தொடர்பாக செயல்படாமலே இருக்கிறீர்கள். உச்ச நீதிமன்றத்தில் உள்ள இவ்வழக்கு பொதுமக்களின் நன்மைக்காக தான் உள்ளது என்பதை நீங்கள் அறியவில்லையா? என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், காலதாமதம் மேற்கொள்ளாமல் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் கற்பழிப்பு வீடியோக்களை தடை செய்ய தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments