பெண்களே எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம்! மதுரையை கலக்கிய போஸ்டரால் பரபரப்பு

Report Print Jubilee Jubilee in இந்தியா
250Shares

மதுரையில் உள்ள ஒரு மாலில் பெண்களுக்கு தனியாக பார் துவக்கப்பட்டுள்ளதாக வெளியான போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் மதுரையில் உள்ள விஷால் டி மால் என்ற மாலில் 'Ladies Night' என்ற பெயரில் பெண்களுக்கான மதுபானக் கூடம் திறக்கப்பட்டிருப்பதாக போஸ்டர் வெளியானது.

இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதை நிர்வாகம் மறுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த உணவகத்தின் பொது மேலாளர் வீர ராஜேஷ் கூறுகையில், அந்த விளம்பரத்தில் 'டிரிங்க்ஸ்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

'டிரிங்க்ஸ்' என்றாலே ஆல்கஹால் மட்டும் அர்த்தம் இல்லை. மாக்டெயில், ஜூஸ் இப்படி எல்லாமே 'டிரிங்க்ஸ்' வகையில் தான் வரும்.

குறிப்பிட்ட நேரத்தில் வரும் பெண்களுக்கு இவ்வளவு இலவசம் என விளம்பரப்படுத்தியுள்ளோம்.

அவர்கள் தனியாக வரமாட்டார்கள் தங்களது குழந்தை, குடும்பத்தினரோடு வருவார்கள் எனவே இப்படி ஒரு விளம்பரம்.

மேலும், நாங்கள் மதுரையின் கலாச்சாரத்துக்கு எந்த விதத்திலும் பங்கம் வர எண்ணியதில்லை.

இந்த சம்பவத்தால் மதுரை மக்களின் மனதை எந்த விதத்திலாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments