இந்தியாவில் காவலர் ஒருவரை பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கொடூரமாக ஓட ஓட அடித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. குறித்த வீடியோவில், காவலர் ஒருவர் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பின்னர், அவர்களை தாக்க முயற்சிக்கிறார்.
உடனே மக்கள் அவரின் தடியை பிடித்துக்கொள்கின்றனர். இதனால், கோபமடைந்த காவலர் மக்களை தாக்குகிறார்.
பாதிக்கப்பட்ட பொது மக்களில் இருந்த இளைஞர்கள் சிலர் சேர்ந்து பொலிசார் கொடூரமாக ஓட ஓட தாக்குகின்றனர்.
எனினும், எதனால் இந்த மோதல் ஏற்பட்டது என்ற தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.