ஓடும் ரயிலில் இளம்பெண் கற்பழிப்பு: பொருட்களையும் கொள்ளையிட்டு சென்ற கும்பல்

Report Print Arbin Arbin in இந்தியா
294Shares

இந்திய தலைநகர் டெல்லியில் ஓடும் ரயிலில் பயணம் செய்த பெண் வன்புணர்வு செய்யப்பட்டு பின்னர் அவரிடம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரிலிருந்து டெல்லிக்கு குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ரயிலில் பெண்களுக்கான பகுதியில் பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். அவருடன் மேலும் 4 பெண்கள் அந்த ரயில் பெட்டியில் பயணம் செய்துள்ளனர்.

ஆனால் அதிலிருந்த அந்த 4 பெண்களும் ஒரு குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் இறங்கிய பின்னர் மர்ம நபர்கள் 3 பேர் கொண்ட கும்பல் அந்த ரயில் பெட்டியில் ஏறி தனியாக இருந்த அந்த பெண்ணிடம் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து உள்ளனர்.

பின்னர் அவர்களில் இரண்டு பேர் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர். இதனிடையே அந்த கும்பலில் ஒருவன் அந்த பெண்ணை தாக்கி கொடுமையான முறையில் வன்புணர்வு செய்துள்ளான்.

அப்போது அங்கு வந்த பொலிசார் பெண்களுக்கான அந்த ரயில் பெட்டியில் அந்த கொடூர இளைஞனிடம் குறித்த இளம்பெண் போராடிக்கொண்டிருப்பதை கண்டு அவர்களை மீட்டு டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அந்த இளைஞனிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரனையில் அவனுடைய பெயர் ஷாபாஸ் என்று தெரியவந்துள்ளது. மேலும் பொலிசார் அவன் மீது மேற்கண்ட குற்றங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து அவனை கைது செய்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments