பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட காவலரின் நெகிழ்ச்சி பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

மத்தியப்பிரதேச மாநிலத்தில் சிமி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறைக்காவலர் ராம்சங்கர் யாதவ், தனது மகளின் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்து வந்த நெகிழ்ச்சி பின்னணி தெரியவந்துள்ளது.

போபால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிமி பயங்கரவாதிகள் 8 பேர் இன்று காலை தப்பினர். அவர்கள் தப்பும்போது சிறையின் தலைமைக்காவலர் ராம்சங்கர் யாதவினைக் கொலை செய்து விட்டு தப்பினர்.

தப்பிய பயங்கரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக மாநில காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிமி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட காவலர் ராம்சங்கர் யாதவின் பிரிவு அவரது குடும்பத்தை நிலைகுலையச் செய்துள்ளது.

ராம்சங்கர் யாதவ் தனது 24 வயது மகளின் திருமணத்தை வரும் டிசம்பர் 9-ல் நடத்தத் திட்டமிட்டு, அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

அவரது இரு மகன்களும் ராணுவத்தில் சேவையாற்றி வருகின்றனர்.

இதுகுறித்து ராம்சங்கர் யாதவின் உறவினரான விஜய்சங்கர் யாதவ் கூறுகையில், தனது மகளின் திருமணத்துக்கான முன்னேற்பாடுகளை மகிழ்ச்சியுடன் ராம்சங்கர் செய்து வந்ததாகத் தெரிவித்தார்.

மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட ராம்சங்கர், தனது மகளின் திருமணத்தை விரைவில் நடத்தி முடிக்கவும் திட்டமிட்டிருந்ததாகவும் விஜய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிமி பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட காவலரின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச முதமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments