பாலியல் வழக்கில் சிக்கிய இளைஞர்களுக்கு நூதன தண்டனை!

Report Print Arbin Arbin in இந்தியா

நகராட்சியில் துப்புரவு பணி செய்து சமூக சேவையாற்ற வேண்டும் என்கிற நிபந்தனையின் அடிப்படையில் 5 கல்லூரி மாணவர்கள் மீதான பாலியல் வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மும்பை புறநகர்ப் பகுதியான பத்லாப்பூரைச் சேர்ந்த 17 வயது மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறிக் கல்லூரி மாணவர்கள் 5பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே குற்றஞ்சாட்டியவரும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் சமாதானமாகப் போக முடிவு செய்தனர்.

வழக்குக்காக நீதிமன்றத்துக்கும் காவல் நிலையத்திற்கு அலைய தங்கள் குடும்பத்தினர் விரும்ப வில்லை என்று பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்த இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் அபய் ஓகா மற்றும் எ.எ. சையது ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் மாணவர்கள் 5 பேரும் செய்த குற்றம் சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது எனக் கருத முடியாது என்று கூறினர்.

இந்த சூழலில் மாணவர்களின் வயது மற்றும் தவறுக்காக அவர்கள் வருந்திய விதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு குற்றவியல் சட்டப் பிரிவு S.482 வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 5 பேர் மீதான வழக்கை ரத்து செய்ய முடிவெடுப்பதாகக் தீர்ப்பில் தெரிவித்தனர்.

அதே வேளையில் மாணவர்கள் 5 பேரும் தலா 50 ஆயிரம் ரூபாயை அபராதமாக உயர்நீதிமன்ற பதிவாளரிடம் வழங்க வேண்டும் என்றும் அந்த தொகை மாநில சட்ட உதவி ஆணையத்திடம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும் மாணவர்கள் ஐவரும் பத்லாப்பூர் நகராட்சிக்குட்பட்ட குல்கான் என்கிற இடத்தில் நவம்பர் மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் 2 மணிநேரம் துப்புரவுப் பணி செய்து சமூக சேவையாற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments