சிறையில் இருந்து தப்பிய பயங்கரவாதிகள்: சுட்டு வீழ்த்திய பொலிஸ்

Report Print Arbin Arbin in இந்தியா

மத்திய பிரதேச மாநிலத்தில் பாதுகாவலரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய 8 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சிமி இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 8 சிமி பயங்கரவாதிகள் பாதுகாவலரை கொலை செய்துவிட்டு இன்று அதிகாலை தப்பியோடியதாக கூறப்பட்டது.

தப்பியோடியவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் போபாலின் புறநகர் பகுதியில் உள்ள எய்ன்ட்கேதி கிராமத்தில் வைத்து நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் 8 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்த வீடியோவை குறித்த பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதில் மலை மேடு மாதிரியான ஒரு இடத்தில் குவியலாக 8 பயங்கரவாதிகளும் படுத்திருக்கிறார்கள்.

அவர்கள் இறந்த நிலையில் காணப்படுவதை போல அசைவற்று உள்ளனர். அவர்களிடம் அதிகாரி ஒருவர் சோதனை போட்டபடி உள்ளார்.

மேலும், "அவர்களிடமிருந்து ஆயுதங்களை எடுங்கள்" என்று சக பொலிஸ் அதிகாரிகள் சத்தமாக ஹிந்தியில் கூறும் வார்த்தைகளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அதேபோலத்தான் ஒரு அதிகாரியும், கீழே கிடக்கும், தீவிரவாதியின் ஜீன்ஸ் பேண்ட்டில் அவரது இடுப்பு பகுதியிலிருந்து கத்தியொன்றை வெளியே எடுக்கிறார்.

ஆனால், அந்த கத்தியை அப்படி செருகி வைக்க முடியுமா என்பது சந்தேகத்திற்கிடமாக உள்ளது. தீவிரவாதியில் ஒருவருக்கு உயிர் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மீண்டும் ஒருமுறை அவரை சுட்ட காட்சி வீடியோவில் பதிவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments