சபரிமலையில் முதன் முறையாக முஸ்லிம் அமைச்சர்: எதற்காக தெரியுமா?

Report Print Basu in இந்தியா

கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் முதன் முறையாக அம்மாநில முஸ்லிம் அமைச்சர் சென்று வழிபட்டுள்ளார்.

இந்த ஆண்டுக்கான மண்டல பூஜைக்காக வருகிற 16ம் திகதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில், கோவிலில் இடம்பெற்ற பணிகளை ஆய்வு செய்ய கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், உள்ளாட்சித்துறை அமைச்சர் ஜெலில் ஆகியோர் சபரிமலைக்கு சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை நேரில் பார்வையிட்டு தேவசம்போர்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

சபரிமலைக்கு சென்று வந்தது பற்றி அமைச்சர் ஜெலில் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில்,

அதில் சபரிமலைக்கு மலையேறி சென்ற நான் இரவு அங்கேயே தங்கினேன். காலையில் அய்யப்பன் சன்னதிக்கு சென்றேன். அங்கு மதரீதியாக யாருக்கும் எந்த தடையும் இல்லை. ‘வாவர் நடைக்கும்’ சென்று பார்த்தேன்.

அய்யப்பன் - வாவரின் நட்பு பல நூற்றாண்டுகளாக இன்றும் தொடர்கிறது. இந்த மத ஒற்றுமை தொடரவேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments