ஜெயலலிதா என்னிடம் நன்றாக பேசினார்! மருத்துவர் தகவல்

Report Print Fathima Fathima in இந்தியா

முதல்வர் ஜெயலலிதா தன்னிடம் நன்றாக பேசியதாக அரசு பொது மருத்துவமனை மருத்துவர் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் அதிமுக பொதுச்செயலர் என்ற அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா 2 படிவங்களில் கையெழுத்திட வேண்டும்.

ஆனால் ஒரு படிவத்தில் ஜெயலலிதா பெருவிரல் ரேகையை வைத்திருந்தார். இது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் அரசு பொது மருத்துவமனை மருத்துவர் பாலாஜி.

அவர் கூறுகையில், முதல்வர் ஜெயலலிதா நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவரால் எழுந்து உட்கார முடிகிறது. அவர் என்னிடம் நன்றாகவே பேசினார்.

கைகள் வழியாக மருந்துகள் ஏற்றப்படுவதால், வலி உள்ளது. இதனால் பேனாவை பிடித்து எழுத முடியவில்லை.

எனவே தான் ரேகை வைத்தார், விரைவில் வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments