தெரு நாய்களை கொன்று குவித்தால் தங்க நாணயம் பரிசு

Report Print Peterson Peterson in இந்தியா

கேரளா மாநிலத்தில் தெரு நாய்கள் கடித்து பொதுமக்கள் உயிரிழப்பது அதிகரித்து வருவதால் இதனை தடுக்க நாய்களை அதிகளவில் கொல்லும் நகராட்சி ஊழியர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என அம்மாநிலத்தை சேர்ந்த அரசு கல்லூரி அறிவித்துள்ளது.

திருச்சூரில் உள்ள St. Thomas College என்ற அரசு கல்லூரியை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் நலச்சங்கம் தான் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து சங்கத்தின் தலைவரான James Pambaykkal என்பவர் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘கேரளா மாநிலம் முழுவதும் தெரு நாய்களின் அச்சுறுத்தல் அதிகரித்து செல்கிறது.

கடந்த 4 மாதத்தில் மட்டும் 175 குழந்தைகள் உள்பட 700 பேரை தெரு நாய்கள் கடித்துள்ளது. இவற்றில் 4 பேர் உயிரிழந்து விட்டனர்.

பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு ஏற்படுத்துவது நமது கடமை.

எனவே, தெரு நாய்களை கண்ட இடத்தில் கொன்று குவிக்கும் உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு கொல்லப்படும் தெரு நாய்களின் எண்ணிக்கை அடிப்படையில் தங்க நாணயம் பரிசாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையை சிறப்பாக செயல்படுத்தும் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தலைவர்களுக்கு தங்க நாணய விருது வழங்கப்படும் என James Pambaykkal தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments