கதறி அழும் காதல் மனைவி: துண்டு துண்டாக கணவனின் சடலம்- தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்

Report Print Raju Raju in இந்தியா

இந்திய எல்லையில் ராணுவ வீரரான மன்தீப் சிங்கினை பாகிஸ்தான் தீவிரவாதிகள் கண்டந்துண்டமாக வெட்டி வீசிச் சென்றதாக வெளியாகியிருக்கும் கொடூர செய்தி அவர் வீட்டை மட்டுமின்றி நாட்டையே உலுக்கியுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்ததையும் மீறி அவ்வபோது பாகிஸ்தான் பல்வேறு தாக்குதல்களை இந்திய ராணுவம் மீது நடத்தி வருகிறது.

கடந்த வெள்ளியன்று ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், எல்லை கட்டுப்பாடு கோட்டைத் தாண்டி இந்திய பகுதிக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள், மன்தீப் சிங் என்ற ராணுவ வீரரை கொன்று, அவர் உடலை பல துண்டுகளாக வெட்டி கோர தாண்டவம் ஆடினார்கள்.

இந்த கொடூர செயலுக்கு இந்தியாவின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற கோழைத்தனமான செயலுக்காக நமது நாடு ஒருபோதும் தலை வணங்காது என அவர் கூறியுள்ளார்.

இதனிடையில் பலியான ராணுவ வீரர் மன்தீப் சிங்கின் குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 30 வயதான மன்தீப் சிங் திருமணம் ஆனவர். அவர் மனைவி பிரிர்னா தன் கணவர் இறந்த சேதியை கேட்டதிலிருந்தே மனம் உடைந்து சோகமாக இருக்கிறார்.

அவர் வீட்டில் உள்ளவர்கள் கூறுகையில், யார் எந்த உதவி கேட்டாலும் மந்தீப் சிங் உடனே செய்து கொடுப்பார். அவரின் இழப்பு எங்களுக்கு வேதனையை தருகிறது.

தீபாவளி கொண்டாட ஊருக்கு வருவதாக சொன்ன அவர் என்று எங்களுடன் இல்லை என அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் இந்திய மக்களின் பாதுகாப்புகாக அவர் உயிர் தியாகம் செய்துள்ளதை நாங்கள் ஏற்று கொள்கிறோம் என அவர்கள் கூறியுள்ளனர்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments