ஆதரித்த குஷ்பு: அதிர்ச்சியில் காங்கிரஸ்

Report Print Deepthi Deepthi in இந்தியா

மத்திய பாஜக அரசின் பொதுசிவில் சட்டத்தை ஆதரிக்கிறேன் என காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த குஷ்புவிடம், அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது இந்துத்துவா அமைப்புகளின் கொள்கை.

இதனை பாரதிய ஜனதா கட்சி அனைத்து தேர்தல் அறிக்கைகளிலும் வலியுறுத்தி வருகிறது. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுசிவில் சட்டம் மூலம் இந்துத்துவா செயல்திட்டத்தை அமல்படுத்த பாஜக முயற்சிக்கிறது என பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தற்போதைய மத்திய பாஜக அரசு பொதுசிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிப்பதையும் அக்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து உங்களின் கருத்து என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த குஷ்பு பொதுசிவில் சட்டம் அவசியம்தான், பெண்களுக்கு சுதந்திரம் அவசியம்.

ஆனால், உத்திரபிரதேச தேர்தலை முன்னிட்டு பாஜக அரசு இதனை கையிலெடுத்துள்ளது என கூறியுள்ளார்.

பொதுசிவில் சட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், குஷ்பு இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பொதுசிவில் சட்டம் தேவையில்லை என்பதே காங்கிரஸ் நிலை. பொதுசிவில் சட்டத்தை செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு ஆதரிப்பது அவரது சொந்த கருத்து என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments