பிறந்த குழந்தையை திருடியது ஏன்? பெண்ணின் உருக வைக்கும் வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் எப்போதும் ஜனநடமாட்டத்துடன் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும்.

அங்கு கடந்த 24ஆம் திகதி இந்து- வெங்கடேஷ் என்ற தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர் இந்து மருத்துவமனையில் தங்கி ஒய்வெடுத்து வந்துள்ளார். பின்னர் 26ஆம் திகதி அன்று இந்துவின் குழந்தையை யாரோ கடத்தி சென்றது கண்டறியப்பட்டது.

பின்னர் இது குறித்து மருத்துவமனையில் உள்ள CCTV கமெராவை ஆய்வு செய்த பொலிசார் அதில் ஒரு பெண் குழந்தையை தூக்கி கொண்டு செல்லும் காட்சியை கண்டனர்.

அவர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் என கண்டறிந்த பொலிசார், குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

பின்னர் இதுகுறித்து பொலிசார் கூறுகையில், திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகியும் தனக்கு குழந்தையில்லாத ஏக்கத்தால் குழந்தையை மருத்துவமனையிலிருந்து தான் திருடியதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments