மச்சினிச்சி மீது கொண்ட மோகம்: நடந்த விபரீத சம்பவம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கன்னியாகுமரி மாவட்டத்தில் மச்சினிச்சி மீது கொண்ட மோகத்தால் மனைவியை கொலை செய்த கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த சாமுவேல் என்பவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் எப்சிபா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

எப்சிபாவுக்கு ஒரு தங்கையும் தம்பியும் உள்ளனர். இவர்களது தாய் சில மாதங்களுக்கு முன்னர் இறந்துவிட்டதால், இவர்கள் இருவரும் அக்கா எம்சிபாவின் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

எப்சிபாவின் தங்கை ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்ததால், அவரை தினமும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் சாமுவேலுக்கு அவர் மீது மோகம் ஏற்பட்டுள்ளது.

இதனால் எப்சிபாவின் தங்கையை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக மனைவியை கொலை செய்யவும் முடிவு செய்தார்.

இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்று, கணவன்-மனைவி ஒரு அறையிலும், மற்றவர்கள் வீட்டின் மற்றொரு பகுதியிலும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

மறுநாள் காலை டேவிட் சாமுவேல் தனது மச்சினிச்சியை எழுப்பி, எப்சிபாய் அசைவற்று கிடப்பதாக கூறினார். உடனே அவர் சென்று பார்த்தபோது எப்சிபாய் இறந்து கிடப்பது தெரியவந்தது.

எப்சிபாய் இரவில் நெஞ்சு வலியால் அலறி துடித்ததாகவும், பின்னர் மாத்திரை சாப்பிட்டுவிட்டு தூங்கியவர் அப்படியே இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், இவரது நடவடிக்கை மீது எப்சிபாயின் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து திருவட்டார் பொலிசில் புகார் கொடுக்கப்பட்டது.

பொலிசார் பிணத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனையில் எப்சிபாய் மாரடைப்பால் இறக்கவில்லை, கழுத்தில் கயிறால் இறுக்கப்பட்டு மூச்சுகுழாய் உடைந்து இறந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சாமுவேலிடம் விசாரணை நடத்தியதில், மச்சினிச்சியை திருமணம் செய்து கொள்வதற்காக ல் மனைவியை கயிறால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததை டேவிட் சாமுவேல் ஒப்புக்கொண்டுள்ளார் .

இதனையடுத்து, சாமுவேல் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments