பிரலப நடிகைக்கு எதிராக மக்கள் போராட்டம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தொகுதி மக்களை சந்திக்காத காரணத்தால் பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ரம்யாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மண்டியா தொகுதி மக்கள் கூறியதாவது, மண்டியா தொகுதியில் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட ரம்யா மக்களிடம் வாக்குபெற்று வெற்றிபெற்றார். பின் மக்கள் வழங்கிய பதவியை அனுபவித்து வந்தார்.

மக்கள் வழங்கிய பதவியை அனுபவித்த ரம்யா பதவி இழந்த பின் மக்களை சந்திப்பதை தவிர்த்தார். இதற்காக மண்டியாவில் இருந்த வீட்டை காலி செய்து கொண்டு வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்தார்.

பின் அடிக்கடி மண்டியாவுக்கு வந்து அரசியல் செய்து வந்த ரம்யா கடந்த சில தினங்களுக்கு முன் மண்டியாவில் சொந்தமாக வீடு வாங்கினார். அப்படி வாங்கிய வீட்டுக்கு திறப்பு விழா நடத்தினார்.

இந்த திறப்பு விழாவுக்கு தொகுதி மக்களை அழைக்கவில்லை. ரம்யா வந்துள்ள தகவலறிந்த தொகுதி மக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க சென்றனர்.

ஆனால் மக்களை சந்திப்பதை அவர் தவிர்த்தார். இதனால் மக்கள் பல மணி நேரம் நாங்கள் அவரது வீட்டுக்கு முன் காத்திருந்தனர். ஆனால் அவர் யாரையும் சந்திக்காமல் பெங்களூருக்கு சென்றார்.

இதனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments