இங்கிலாந்தில் பட்டையை கிளப்பிய இந்திய இராணுவத்தினர்!

Report Print Basu in இந்தியா

இங்கிலாந்தில் நடைபெற்ற கடற்பகுதி ரோந்து போட்டியில் இந்திய இராணுவ வீரர்கள் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.

இங்கிலாந்து இராணுவம் ஆண்டிற்கு ஒருமுறை Cambrian Patrol exercise என்ற பெயரில் சர்வதேச அளவிலான கடற்பகுதி ரோந்துப் போட்டியை நடத்துகிறது. இந்த ஆண்டு வேல்ஸ் கடற்பகுதியில் இந்த போட்டி நடைபெற்றது.

கடும் சவாலாக உள்ள இந்த போட்டியில் இந்திய இராணுவத்தின் 2 வது பட்டாலியனின், 8 கூர்க்கா துப்பாக்கிப் படை வீரர்கள் வென்று வெற்றிவாகை சூடியுள்ளனர்.

இதனையடுத்து பிரிட்டன் இராணுவம் வெற்றிப்பெற்ற இந்திய இராணுவ வீரர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளது.

இராணுவத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, பதக்கம் வழங்கும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வீடியோவை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments