சென்னையில் பயங்கரம்: சாலையை கடக்க முயன்ற 3 கல்லூரி மாணவிகள் பலி!

Report Print Jubilee Jubilee in இந்தியா

சென்னையில் சாலையை கடக்க முயன்ற கல்லூரி மாணவிகள் 3 பேர் மீது தண்ணீர் லொரி மோதியதில் மாணவிகள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கிண்டி- கத்திபாரா மேம்பாலத்திற்கு அருகே செல்லம்மாள் மகளிர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் தான் சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்கியுள்ளனர்.

விபத்தில் பலியான மாணவிகளின் பெயர் சித்ரா, ஆயிஷா மற்றும் காயத்திரி என்பது தெரியவந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தண்ணீர் லொரி வேகமாக வந்ததே விபத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லொரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments