ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு: அலெக்கா தூக்கிய பொலிஸ்

Report Print Deepthi Deepthi in இந்தியா

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக தமிழர்களுக்கும் கர்நாடக மக்களுக்கும் பெரும் பிரச்சனை நிலவியது.

எல்லையோர மாவட்டங்களில் கடையடைப்பு, பந்த் மற்றும் தமிழர்கள் மீது தாக்குதல் என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், பேருந்துகள் எரிப்பு, கடைகளை உடைத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்ட 1,339 பேரை கர்நாடக காவல்துறை கைது செய்துள்ளது.

இதில் கவனித்தக்க விடயம் என்னவென்றால் இரண்டு இளைஞர்கள் பேருந்துகளை தீயிட்டு கொளுத்திவிட்டு, அதன் முன்னால் நின்று ஹாயாக செல்பி எடுத்துள்ளனர்.

இவர்கள் செல்பி எடுத்ததை ஊடகம் ஒன்று தனது கமெராவுக்குள் படம்பிடித்து, போராட்டத்திற்கு மத்தியிலும் இளைஞர்களை செயல் பாருங்கள் என செய்தி வெளியிட்டது.

இந்த புகைப்படத்தின் மூலமாக இவர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

காவிரி விவகாரத்தில் வன்முறையில் ஈடுபட்ட 1,339 பேரை கர்நாடக காவல்துறை கைது செய்துள்ளது. 120 புகைப்படங்கள்,28 வீடியோக்கள் காவல்துறை வசம் சிக்கியுள்ளது. 159 வாகனங்கள், 37 கடைகள் சேதப்படுத்தப்பட்டிருந்தது. மேலும்,49 காவல்துறையினர்கள், 17 பாதுகாப்பு படையினர்களும் காயமடைந்திருந்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments