நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்

Report Print Raju Raju in இந்தியா

தன் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை சுவற்றில் மோதி கொலை செய்த கொடூர கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடாச்சலம், இவரின் மனைவி அல்லி (22) இந்த தம்பதிகளுக்கு சதாசிவம் (4) சிவா (3) என இரு பிள்ளைகள் உள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டத்துக்கு தன் குடும்பத்துடன் வெங்கடாச்சலம் வேலை தேடி வந்தார். அங்கு கல் உடைக்கும் வேலை கிடைக்கவே அங்கேயே வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கியுள்ளார்.

குடிபழக்கத்துக்கு அடிமையான வெங்கடாச்சலம் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் அவருடன் சண்டை போடுவார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு மது குடித்து விட்டு முழு போதையில் இரவு வீட்டுக்கு வந்த அவர் தூங்கி கொண்டிருந்த அல்லியை எழுப்பி தகராறு செய்துள்ளார்.

பின்னர் கோபத்தில் தன் மனைவி என்றும் பார்க்காமல் அல்லி தலையை சுவற்றில் முட்டி அவரை துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். பின்னர் தான் கொலை செய்ததை தனது ஊர் தலைவரிடம் வெங்கடாச்சலம் சொல்லியுள்ளார்.

ஊர் தலைவர் உடனே இது பற்றி பொலிசிடம் தகவல் கொடுக்க, விரைந்து வந்த பொலிசார் அல்லியின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வெங்கடாச்சலத்தை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments