வேடிக்கை பார்த்த இந்தியர்கள்: காப்பாற்ற வந்த ஆப்பிரிக்கர்கள் நெகிழ்ச்சியான சம்பவம்

Report Print Santhan in இந்தியா

ஆப்பிரிக்காவில் தமிழகத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ஒருவர் அங்கிருந்த ஆப்பிரிக்கர்களிடம் இருந்து தப்பிய அனுபவத்தை மிகுந்த மனவேதனையுடன் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிபவர் அதியமான்.

இவர் பணி நிமித்தம் காரணமாக சில தினங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்கா நாடான உகாண்டாவுக்கு சென்றுள்ளார்.

அப்போது இந்தியர்கள் அதிகம் தங்கும் கம்பால உணவகத்தில் தங்கியுள்ளார். அதன் பின்னர் அங்கு உணவு அருந்துவதற்காக உணவகத்திற்கு சென்றுள்ளார்.

உணவகத்தில் சாப்பிட்ட பின்னர், பணம் தருவதற்காக காத்திருந்த போது, சில ஆப்பிரிக்கர்கள் வந்து தாங்கள் இமிக்ரேஷன் ஆபிசர்ஸ் என கூறி அதியமானிடம் உன்னுடைய பாஸ்போர்ட், நீ எங்கே தங்கியிருக்கிறாய் என பல கேள்விகள் கேட்டுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த அதியமான் அவருடைய ஆப்பிரிக்க நண்பர்களிடம் தொலைபேசியில் இவ்வாறு தன்னை கேள்வி கேட்கிறார்கள் எனவும், உடனடியாக காரில் ஏறு என கூறுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர்களோ காரில் ஏறவேண்டாம் எனவும், அவர்கள் கடத்தல்காரர்கள் என கூறியும், சற்று நேரம் தாக்குபிடி எனவும் அதற்குள் தாங்கள் வந்து விடுவதாகவும் கூறியுள்ளனர்.

இதனால் இவர்களிடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. அப்போது இந்தியர்கள் அதிகம் வந்து உணவு அருந்தும் இடம் என்பதால், அதியமான் உதவி செய்யுமாறும், தானும் ஒரு இந்தியன் எனவும் தமிழகத்தைச் சேர்ந்தவன் எனவும் கூறியுள்ளார்.

ஆனால் அவர்களோ எதுவும் தெரியாதது போல் திரும்பிக் கொண்டனர். இதைக் கண்ட அங்கிருந்த சில ஆப்பிரிக்கர்கள், அதியமான் அருகில் சென்று, அவருக்கு இடையூறு செய்த ஆப்பிரிக்கர்களிடம் இமிக்ரேஷன் ஆபிசர்ஸ் அடையாள அட்டையை காட்டும்படி கூறியுள்ளனர்.

ஆனால் அவர்களோ அதற்கு மறுக்க , சந்தேகமடைந்த ஆப்பிரிக்கர்கள் அவர்களை அடித்து உதைத்து அருகில் இருந்த காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இது குறித்து அதியமான் கூறுகையில், உணவகத்தில் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது இந்தியர்களை நோக்கி உதவு மாறு என கூச்சலிட்டேன், ஆனால் அவர்கள் உதவ வரவில்லை. ஆப்பிரிக்கர்கள் சிலர் தான் தன்னை காப்பாற்றி அறைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆப்பிரிக்கர்கள் மட்டும் தன்னை காப்பாற்றவில்லை என்றால் என் நிலைமை என்ன ஆகியிருக்கும் என மனவருத்துடன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments