தன்னை கற்பழித்தவனுக்கு விடுதலை: தீக்கிரையான சிறுமி! மனதை உருக வைக்கும் கதை

Report Print Basu in இந்தியா

மத்திய பிரதேசத்தில் சிறுமி ஒருவர் தன் வாழ்க்கையை நாசம் செய்தவர்களில் ஒருவன் ஜாமீனில் விடுதலையானதை அறிந்து தீ குளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜாமீனில் விடுதலையான நபரை தற்போது காணவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

போபாலின் Itarsi பகுதியில் உள்ள ஒரு கிராமத்திலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் இரண்டு நபர்கள் சிறுமி ஒருவரை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் சிறுமியின் உடல் முழுவதும் பிளோடல் வெட்டி உயிர் இழக்கும் நிலையில் விட்டுச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து சிறுமி பொலிஸை நாடியதை அடுத்து இரண்டு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாலியல் பலத்காரத்திற்கு உதவிய நபருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. வெளிவந்த நபர் சிறுமியை கொன்றுவிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அச்சத்தில் சிறுமி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். 40 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி தற்போது அபாய கட்டத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments