மோடி ஒரு போர் விரும்பி; காங்கிரஸ் தாக்கு

Report Print Maru Maru in இந்தியா

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் ’மோடி ஒரு போர் விரும்பி’ என அவர் மீது அதிரடியான கருத்தை கூறியுள்ளார்.

இப்படி இவர் கூறுவதற்கு காரணம். சமீப கலமாக, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு போருக்கான சூழல் உருவாகிக் கொண்டிருப்பதுதான்.

மோடி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் ஏற்படும்படியான சூழலை ஏற்படுத்துவதே அடுத்த தேர்தலில் வெற்றிபெறுவதற்குதான் என்கிறார்.

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளிலும் அணு ஆயுதங்கள் வெடிக்கச் செய்யும் முயற்சி சரியா என்றும் கேட்டிருக்கிறார்.

இந்த அரசியல் போர் உருவாகக் காரணம். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உரி நகரில், செப்டம்பர் 18 ல் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 இந்திய வீரர்கள் இறந்தது.

அதைனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியின் எல்லையில் இந்தியா தனது ராணுவத்தை செப்டம்பர் 29 ல் இறக்கியதும்தான்

இந்த போர்ச்சூழல் அகல, இந்திய அரசு பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார்.

கடவுளின் பெயரால் ஏற்படுத்தப்படும் ஒரு போர் விளையாட்டை இந்தியா மற்றும் பாகிஸ்தான் குழந்தைகள் பார்க்க வேண்டாம்.

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் அரசுகள் போரிடக்கூடிய வறுமையும் சீர்கேடுகளும் எவ்வளவோ இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என்றும் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments