ஜெயலலிதாவை காதலித்தேன்..! முன்னாள் நீதிபதியின் பரபரப்பை கிளப்பும் புதிய பதிவு!

Report Print Basu in இந்தியா

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை காதலித்ததாக நகைச்சுவைக்கு சொன்னேன் என முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ புதிய விளக்கம் அளித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ, ஜெயலலிதாவை காதலித்ததாக சமீபத்தில் பேஸ்புக்கில் பதிவிட்டு பரபரப்பை கிளப்பினர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தை தொடர்ந்து தனது பதிவை நீக்கினார்.

இந்நிலையில், குறித்த பதிவு குறித்து புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், ஜெயலலிதாவை காதலித்ததாக நகைச்சுவைக்காக சொன்னேன். ஆனால், அதற்கு பெரிய கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழர்கள் நகைச்சுவைகளை புரிந்து கொள்வதில் பீகாரிகளை விட சிறந்தவர்கள் என நான் கருதினேன்.

ஆனால், இப்போது எனது கருத்தை பரிசீலித்து வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார். இதற்கும் பலர் எதிர்ப்பு தெரிவத்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments