மீண்டும் லண்டன் மருத்துவர்! ஜெயலலிதாவுக்கு ஐந்து நாட்கள் தீவிர சிகிச்சை?

Report Print Raju Raju in இந்தியா

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் இன்று மீண்டும் சென்னைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக கடந்த 30ஆம் திகதி சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே முதல்வருக்கு தேவையான சிகிச்சையையும் ஆலோசனையும் வழங்கிவிட்டு கடந்த 2ஆம் திகதி லண்டன் புறப்பட்டு சென்றார்.

இதை தொடர்ந்து கடந்த 5ஆம் திகதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் சென்னை வந்து முதல்வருக்கு அளிக்கும் சிகிச்சை பற்றி கேட்டறிந்து தேவையான ஆலோசனைகளை வழங்கி சென்றனர்.

இதை தொடர்ந்து கடந்த 6ஆம் திகதி மீண்டும் சென்னை வந்த ரிச்சர்ட் நுரையீரல் சம்மந்தமான சிகிச்சையை முதல்வருக்கு தரும் படி ஆலோசனை கூறிவிட்டு லண்டன் சென்றார்.

இந்நிலையில் மூன்றாவது முறையாக லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே இன்று சென்னை வந்து ஐந்து நாட்கள் தங்கியிருந்து முதல்வருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதே போல டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments