ஓடும் பேருந்தில் இளைஞர் சுட்டுக் கொலை: பழிக்கு பழி தீர்த்ததாக விசாரணையில் தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 9 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கோவில்பட்டியைச் சேர்ந்த கருப்பச்சாமி என்பவர் மதுரையை நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்தில் நேற்று பயணம் செய்து கொண்டிருந்த போது, அவர் அருகே பயணம் செய்த இருவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர், இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கருப்புச்சாமியை சுட்டு விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

கருப்பசாமி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில், கடந்த யூலை மாதம் அப்துல்லா என்பவரை கருப்புச் சாமியின் சகோதர்கள் கொலை செய்ததாகவும், இதற்கு பழி தீர்ப்பதற்காகவே கருப்புச் சாமியை அப்துல்லாவின் தந்தை ரபீக் என்பவர் சில நபர்களை வைத்து கொலை செய்திருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக 9 பேரை பொலிசார் கைது செய்திருப்பதாகவும், தலைமறைவாக உள்ள அப்துல்லாவின் தந்தை ரபீக்கை பொலிசார் தீவிரமாக தேடிவருவதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவத்திற்கு கொலையாளிகள் நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments